செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (07:54 IST)

அணியில் நான் செய்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை… சி எஸ் கே அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ்!

ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இடையில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு, அவரால் அணியின் பளுவை சுமக்க முடியாமல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இதையடுத்து இந்த ஆண்டு ருத்துராஜுக்கு பொறுப்பு கைமாற்றப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பேற்றுள்ளது குறித்து பேசியுள்ள ருத்துராஜ் “சிறப்பாக உணர்கிறேன். சி எஸ் கே பொறுப்பேற்று இருப்பது தனிச்சிறப்புகொண்டது. ஆனால் இது மிகப்பெரிய பொறுப்பு. ஏனென்றால் எங்களிடம் இருக்கும் ப்ளேயர்களை நினைத்து மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.

அனைவருமே நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள். அதனால் நான் செய்ய வேண்டியது பெரிதாக எதுவும் இருக்காது. அணியில் தோனி, ஜட்டு, அஜிங்க்யே ரஹானே ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த தொடரை அனுபவித்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.