தொடர்புடைய செய்திகள்
- ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே கேப்டனாக தோனியின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா?
- கேப்டன் மாற்றம் தோனியின் முடிவா? CSK பயிற்சியாளர் பேட்டி
- IPL 2024: கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்.. சிஎஸ்கே புது கேப்டன் இவர்தான்?! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- CSK vs RCB போட்டியை காண செல்பவர்களுக்கு இலவச பேருந்து டிக்கெட்! – போக்குவரத்துத் துறை அசத்தல் அறிவிப்பு!
- ஜான்வி கபூரின் ஃபேக் ஐடியோடு சாட் செய்த அஸ்வின்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
தோனியின் இந்த முடிவு எனக்கு கடைசி நேரத்தில்தான் தெரியும்… சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்!
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இடையில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு, அவரால் அணியின் பளுவை சுமக்க முடியாமல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. அவருக்கு ரசிகர்கள் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கேப்டன்சி மாற்றம் குறித்து சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசும் போது “எனக்கே இந்த முடிவு கேப்டன்கள் சந்திப்புக்கு முன்னர்தான் தெரியும். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். ஏனென்றால் அது தோனியின் முடிவு. தோனி எந்த முடிவெடுத்தாலும் அது அணியின் நன்மைக்காகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.