திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:25 IST)

14 பந்துகள் மீதமிருந்தும் தோற்றுவிட்டோம்… இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா வருத்தம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை ரோஹித் ஷர்மா கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். இதனால் இறுதிகட்டத்தில் போட்டி பரபரப்பாகி இந்திய அணி 230 ரன்களில் இருக்கும்போது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் போட்டி டிரா ஆனது.

கடைசி கட்டத்தில் ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது திருப்புமுனையாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “மீதம் 14 பந்துகள் இருந்தும் நாங்கள் தோற்றது வருத்தமளிக்கிறது. நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இடையில் சில விக்கெட்களை இழந்தோம். ராகுல் அக்ஸர் படேல் கூட்டணி எங்களை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றது. ஆனால் இலங்கை அணி சிறப்பாக விளையாடி போட்டியை வென்றது” எனக் கூறியுள்ளார்.