1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (16:21 IST)

கொழும்புவில் முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்து வீச்சில் திணறும் இலங்கை..

இந்தியா மற்றபடி இலங்கை அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒரு நாள் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் அந்த அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

சற்றுமுன் வரை 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் கேப்டன் அஸ்லாங்கா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் சிராஜ், அக்சர் பட்டேல், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ

இலங்கை: நிசாங்கா, பெர்னாண்டோ, மெண்டிஸ், சதீரா, அஸ்லாங்கா, லியானாஞ்சே, ஹஸரங்கா, டுனித், தனஞ்செயா, அசிதா பெர்னாண்டோ, முகமது ,

இந்தியா: ரோஹித் சர்மா, கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்,


Edited by Siva