1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 12 மார்ச் 2025 (08:22 IST)

நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்… உலகக் கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா பேச்சு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த போட்டி முடிந்ததும் மகிழ்ச்சியான முகத்தோடு ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இது பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் 2027 ஆம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் “2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பற்றி இப்போதே சொல்ல முடியாது. அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் நான் எதற்கும் தயாராகவே உள்ளேன். இப்போது நான் நன்றாகவே விளையாடுகிறேன். வீரர்களும் நான் அணியில் இருப்பதை விரும்புகின்றனர்” எனக் கூறியுள்ளார்.