செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (14:58 IST)

50 ஓவர் உலகக்கோப்பையை வித்தியாசமா அப்ரோச் செய்வோம்… இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா!

50 ஓவர் உலகக்கோப்பையை வித்தியாசமா அப்ரோச் செய்வோம்… இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா!
நேற்று நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் பட்டத்தை கை நழுவ விட்டுள்ளது இந்தியா. இதனால் இந்திய அணியும் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

விரைவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியை மனதில் வைத்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அக்டோபரில் நடக்க உள்ள உலகக்கோப்பையில் வித்தியாசமான முறையில் விளையாட்டை முயற்சிப்போம்.  வீரர்களுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்போம். ” எனக் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நடத்தும் கோப்பைகள் எதையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.