1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

4வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி.. இலங்கையை ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு..!

4வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி.. இலங்கையை ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு..!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியிலும் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க வீராங்கனைகளின் அதிரடியால் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், ஷஃபாலி வர்மா 79 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். 
 
பின்னர் 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, ஓரளவுக்கு போராடிய போதிலும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், 5-0 என்ற கணக்கில் இலங்கையை 'ஒயிட் வாஷ்' செய்து சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva