ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோஹித் ஷர்மா..!
ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர் சனத் ஜெயசூர்யா 2,387 ரன்கள் அடித்திருந்ததே ஓராண்டில் தொடக்க வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்களாகும். இதனை அவர் 1997 ஆம் ஆண்டில் நிகழ்த்தினார்.
இந்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள்போட்டியில் ரோஹித் ஷர்மா ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதே போல் முகமது ஷமி, நடப்பாண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.