தந்தையை பெருமைப்பட வைத்த நடிகர் சூரியின் மகன் – அஸ்வின் பாராட்டு !

Last Modified சனி, 21 டிசம்பர் 2019 (08:14 IST)
நடிகர் சூரியின் மகன் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கையிலிருந்து பெற்றுள்ளார்.
 

மதுரை கிரிக்கெட் அசோசியேசன் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் தொடரை மதுரையில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பல வீரர்களின் நடிகர் சூரியின் மகனும் மகனான செய்யும் ஒருவர்.
 
அதுமட்டுமில்லாமல் இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய பிளேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கையால் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் அடைந்துள்ளார்.
 இதில் மேலும் படிக்கவும் :