செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (14:18 IST)

சூர்யகுமார் யாதவ்வுக்கு ஆதரவாக ரோஹித் ஷர்மா… நீடிக்கும் கேப்டன்சி குழப்பம்!

உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தேர்வுக்குழுவினர் அனைவரும் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக கம்பீருக்கும், அஜித் அகார்கருக்கும் இடையே விவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவாதம் முடிவை எட்டாததால்தன இன்னும் இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் என்ற காரணத்தால் ரோஹித் ஷர்மாவிடம் இதுகுறித்து ஆலோசனைக் கேட்டபோது அவர் சூர்யகுமார் யாதவ் பக்கமே இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.