1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (11:35 IST)

ஏர் இந்தியாவில் 600 பணியிடங்களுக்கு 25,000 பேர் வருகை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 காலியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பணிக்காக 25 ஆயிரம் பேர் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குஜராத்தில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பம் செய்து இருந்ததாகவும் ஒரே நேரத்தில் அனைவரும் வருகை தந்து முண்டியடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வேலையில்லா திண்டாட்டத்தில் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள ஏர் இந்தியா  நிறுவனத்தில் 600 பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பணிக்காக 25 ஆயிரம் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
விமானத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலைக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஏர் இந்தியா ஊழியர்கள் அவர்களிடம் விண்ணப்பங்களை மட்டும் பெற்றுக் கொண்டு ஈமெயில் மூலம் பதில் அனுப்புவதாக திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவில் வேலை இல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது
.
Edited by Mahendran