1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma started his practice to prove his fitness

உடல் தகுதியை நிரூபிக்க ரோஹித் ஷர்மா பயிற்சி ஆரம்பம் – ஆஸி செல்வாரா?

ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது உடல்தகுதியை நிரூபிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆஸி அணிக்கான அணியோடு இணைந்து செல்லமாட்டார் என சொல்லப்படுகிறது. பெங்களூருவில் உள்ள பெங்களூரு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டால் மட்டுமே அவர் துபாய்க்கு செல்வார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ரோஹித் ஷர்மா பெங்களூர் அகாடமியில் தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.