பிப்ரவரிக்குள் கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் என்ன விலைக்கு கிடைக்கும்?

Corona virus - vaccine
பிப்ரவரிக்குள் கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் என்ன விலைக்கு கிடைக்கும்?
siva| Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (07:42 IST)
இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூறலாம். ஆனால் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் மட்டுமே இரண்டாவது அலை வீசுவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பிப்ரவரிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ரூபாய் 600க்கு கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா நோய் தடுப்பூசி மருந்து தரப்படும் என உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :