தொடர்புடைய செய்திகள்
- நேற்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ஹிட்மேன்… இந்திய வீரர்களில் முதல் ஆளாக படைத்த சாதனை!
- 16 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- ஒருத்தருக்கு கொரோனா; 3.20 லட்சம் பேர் ஊரடங்கில்..! – ஸ்ட்ரிக்டு காட்டும் சீனா!
- தொழில்முனைவோருக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி! – தமிழக அரசு அறிவிப்பு!
- 56.28 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
சிறுமியைத் தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸ்ர்… சந்தித்து வருத்தம் தெரிவித்த ஹிட்மேன்!
இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா விளாசிய பந்து மைதானத்தில் இருந்த சிறுமியின் மீது பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போது மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.
அவர் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியின் மீது பட்டது. உடனடியாக அந்த சிறுமிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். போட்டி முடிந்ததும் அந்த சிறுமியை சந்தித்த ரோஹித், அவரிடம் வருத்தம் தெரிவித்து பொம்மை ஒன்றை பரிசாக அளித்தார்.
அடுத்த கட்டுரையில்