1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma not travelling with Indian team

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

ரோஹித் ஷர்மா
நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

அவர் மனைவியின் பிரசவத் தேதி அந்த நேரத்தில் வருவதால் இந்தியாவில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியில் கேப்டன் இல்லையென்றால் அது அணிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் பெரியளவில் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் ரோஹித் ஷர்மா செல்ல மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவில்லை என்றும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?