வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வா?... அப்போ கேப்டன் யாரு?
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜூலை 12 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ள தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என தெரிகிறது. அதனால் அந்த போட்டிகளில் தற்காலிக கேப்டனாக அஜிங்க்யே ரஹானே நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே டி 20 போட்டிகளில் இருந்து ரோஹித் ஷர்மா ஓரம்கட்டப்பட்டுவிட்டார். இந்நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் அவரது முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.