பயிற்சியில் ரோஹித் சர்மா காயம்..

Arun Prasath| Last Modified சனி, 2 நவம்பர் 2019 (11:34 IST)
பயிற்சியின்போது பந்து தாக்கியதால் டி20 இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்துடன் இந்தியா அணி மோதும் டி20 போட்டி, நாளை டெல்லி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வலை பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டார் இந்திய டி20 போட்டிகளுக்கான கேப்டன் ரோஹித் சர்மா.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த வேகபந்து வீச்சாளர் நுவான் பயிற்சியில் பந்து வீசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் ரோஹித்தை நோக்கி பந்து வீசியபோது, அது ரோஹித்தின் தொடையில் தாக்கி காயம் ஏற்படுத்தியது. இதனால் அவர் பாதியிலேயே பயிற்சியை விட்டு வெளியேறினார்.

எனினும் அவர் உடல் நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், டி20 ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு கூறியுள்ளனர். வங்கதேச வேகபந்து வீச்சாளர் முஸ்தாபிஜூரின் தாக்குதலை சமாளிக்க பயிற்சி எடுப்பதற்காகவே இலங்கையை  சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைகப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :