இரவு – பகல் ஆட்டம்; ஓகே சொன்ன வங்கதேசம் – குஷியில் இந்தியா!

Prasanth Karthick| Last Modified புதன், 30 அக்டோபர் 2019 (11:06 IST)
வங்கதேசத்துடனான டெஸ்ட் ஆட்டத்தை இரவு – பகல் ஆட்டமாக நடத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளை காண வங்கதேச பிரதமர் இந்தியா வர இருக்கிறார். இதுநாள் வரை டெஸ்ட் போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெறுவதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பகல் – இரவு ஆட்டமாக நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. இதற்காக ஒப்புதல் கேட்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட வங்கதேசம் பகல் – இரவு ஆட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :