செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (10:39 IST)

உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல்: பிரதமர் மோடிக்கு முதலிடம்..!

PM Modi
உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் இந்திய பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 
வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம் உலக தலைவர்களின் மத்தியில் செல்வாக்கு உள்ள தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது 
 
22 நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 76% பேர் பிரதமர் மோடியை குறிப்பிட்டுள்ளதால் அவர் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக உலக அளவில் பதினெட்டு சதவீதம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
 
மூன்றாம் இடத்தை மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மானுவேல் லோபஸ் ஒபரடோர் அவர்களும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மெலோனி நான்காவது, ஐந்தாவது இடத்தை பெற்று இருக்கிறார்கள். 
 
அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்த தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகத் தலைவர்களை தரவரிசை பட்டியலில் இந்திய பிரதமர் மோடி தான் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva