வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:25 IST)

துபாய் அணிக்காக விளையாடப் போகும் ராபின் உத்தப்பா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.