ரோஹித், கோலியை அடுத்து முக்கிய மைல்கல்லை எட்டிய ரிஷப் பண்ட்!
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோர் 2000 ரன்களைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.