1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (10:15 IST)

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்… 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் முதலில் பேட் செய்யவந்த இந்திய அணியில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர்.

அதையடுத்து வந்த கோலி 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். சற்று நிதானமாக விளையாடிய கே எல் ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் இருக்கின்றனர்.