திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (07:40 IST)

ரிஷப் பண்ட்டின் லேட்டஸ்ட் புகைப்படம்… 50 ஓவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா?

இந்த ஆண்டு தொடக்கதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அவர் பல கிரிக்கெட் தொடர்களை இழக்க நேர்ந்தது. இப்போது ஓய்வில் இருக்கும் அவர் வேகமாக குணமாகி வருகிறார். கடந்த மாதம் ஐபிஎல் தொடரை பார்க்க வந்த அவரிடம் நேர்மறையான முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து சமூகவலைதளங்கள் மூலமாக தன்னுடைய உடல்நல அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் இப்போது தன்னுடைய நண்பர் ஒருவரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இப்படி அவர் வேகமாக குணமாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.