வெஸ்ட் இண்டீஸ் தொடர்… பண்ட், கருண் வெளியே… துருவ் ஜுரெல் உள்ளே!
இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல இங்கிலாந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய கருண் நாயருக்கும் வாய்ப்பளிக்கப்படாது எனத் தெரிகிறது. இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதே போல சிறப்பாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கலுக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.