திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (07:17 IST)

யுவ்ராஜ் சிங் செய்ததை ரிங்கு சிங் ஒரு துளி செய்தாலே போதும்… சுனில் கவாஸ்கர் கணிப்பு!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளையும் சிக்சராக்கி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் ரிங்கு சிங் ஒரே இரவில் கிரிக்கெட் உலகம் முழுவதும் அறிந்த நபராகிவிட்டார். ஏனெனில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத சாதனை இது. இந்த தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை 50 ரன்கள் சராசரிக்கு மேல் சேர்த்தார்.

இதையடுத்து இப்போது அவர் இந்திய அணிக்கு டி 20 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரிங்கு சிங் பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “திறமை என்பது எல்லோருக்கும் கிடைக்காது. ரிங்கு சிங்கிடம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் அவருக்கு சீரான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

ரிங்கு சிங் இந்திய ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரை இன்னொரு யுவ்ராஜ் சிங்காகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு யுவ்ராஜ் சிங் செய்ததில் ஒரு துளியை செய்தால் கூட ரிங்கு சிங் தன் பணியை அபாரமாக செய்ததாகவே அர்த்தம்” எனக் கூறியுள்ளார்.