திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (11:42 IST)

ஜாடேஜாவை நான் சமாதானப்படுத்தினேனா?... அணியோடு பிரச்சனையா?- பதிலளித்த சிஎஸ்கே நிர்வாகி!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ரசிகர்கள் அதிகமாக வேண்டிக்கொண்டது ஜடேஜா அவுட் ஆகவேண்டும் என்பதைதான். அதற்குக் காரணம் அவர் அவுட்டானால்தான் அவருக்கு பின் தோனி வந்து ஆடுவதை அவர்களால் பார்க்கமுடியும் என்பதே.

ஜடேஜா பேட் செய்யும் போது  “ஜடேஜா நீங்க சீக்கிரம் அவுட் ஆகி போங்க.. தோனியை வர சொல்லுங்க” என ரசிகர்கள் போர்டு பிடிப்பது ஜடேஜாவை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அவரே வெளிப்படையாகக் கூறியிருந்தார். இதனால் ஜடேஜாவுக்கு அணி நிர்வாகத்தோடு பிரச்சனை எழுந்ததாக இப்போதும் யூகங்கள் பரவிக் கொண்டு இருக்கின்றன.

சிஎஸ்கே அணியோடு ஜடேஜாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். அதில் “ரசிகர்கள் ஜடேஜா அவுட் ஆகவேண்டும் எனக் கத்தியதில் அவருக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால் அதை அவர் புகாராக சொல்லவில்லை. கடைசி போட்டி முடிந்ததும் அந்த வெற்றியை அவர் தோனிக்குதானே அர்ப்பணிப்பதாகக் கூறினார். அணியில் யாருக்கும் யாரோடும் பிரச்சனை இல்லை. நான் அவரை சமாதானப்படுத்தியதாகக் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் போட்டி பற்றிதான் பேசிக்கொண்டோம்” என சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.