தொடர்புடைய செய்திகள்
- இந்திய கேப்டன்களில் இந்த சாதனையைப் படைத்தது ரோஹித் ஷர்மா மட்டும்தான்!
- கோலியின் விக்கெட் சிறந்த பந்து அல்ல- ஆஸி கிரிக்கெட் வீரர் டாட் மர்ஃபி மகிழ்ச்சி
- இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: ரோஹித் ஷர்மா சதம் அடித்து இந்திய அணியை மீட்ட தருணம்
- ''பசு அரவணைப்பு தினம்'' வாபஸ் -விலங்கு நல வாரியம் அறிவிப்பு!
- இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்: அக்சர் பட்டேல், ஜடேஜாவின் அரைசதத்துடன் முடிந்த 2வது நாள் ஆட்டம்!
நாங்க எல்லாம் பிட்ச் விஷயத்தில் தலையிடவே மாட்டோம்… ஆனா இப்போ? – ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது.
சமீபகாலமாக மைதான பராமரிப்பு மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா நாக்பூர் டெஸ்ட் போட்டியிலும் இது சம்மந்தமான இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. நாக்பூர் மைதானம் முழுக்க முழுக்க சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுபற்றி ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரே வித்தியாசமாக நான் யூகிப்பது என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் விக்கெட்டுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன என்பது குறித்து வீரர்களுக்கு உண்மையில் எந்த அக்கறையும் இல்லை என்று எனக்குத் தெரியும். நான் விளையாடும் போதோ, மற்றும் நான் விளையாடி முடித்த பிறகோ, ஆஸி. கேப்டன்களோ அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எவரும் பராமரிப்பாளர்களிடம் பேசவே இல்லை. தங்களால் இயன்ற சிறந்த விக்கெட்டைத் தயாரிப்பதற்கான சுதந்திரத்தை பராமரிப்பாளர்களுக்குக் கொடுத்தார்கள்.” என மறைமுகமாக இந்திய அணி மைதான பராமரிப்பில் தலையிடுவதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்