போட்டிக்கு நடுவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸி அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங், இப்போது சில லீக் அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இப்போது ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு கொண்டிருந்த அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.