வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (08:13 IST)

கலக்கிய பதீரனா… ரோஹித்தின் சதம் வீண்… எல் கிளாசிக்கோவில் வென்ற சி எஸ் கே!

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் எல் கிளாசிக்கோ என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச முடிவு செய்தது.

சிஎஸ்கே பேட்டிங் இறங்கிய நிலையில் ரஹானேவுக்கு வான்கடே பழக்கமான மைதானம் என்பதால் அவரை ஓபனிங் இறக்கியது. ஆனால் அவர் 5 ரன்களுக்கே அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திராவும் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் ருதுராஜ் (69) – ஷிவம் துபே (66) கூட்டணி நின்று விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி ரன்களை குவித்தது. இடையே வந்த டேரில் மிட்செல் மட்டும் 14 பந்துகளுக்கு 17 ரன்கள் என டெஸ்ட் மேட்ச் விளையாடினார். கடைசி நேரத்தில் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து வான வேடிக்கைக் காட்டினார். இதன் மூலம் சி எஸ் கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா நிலைத்து நின்று சதமடித்தார். ஆனால் மறுமுனையில் அவருக்கு ஆதரவு இல்லாமல் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருந்தன. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சென்னை அணி சார்பாக மதீஷா பதீரனா 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.