வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (19:51 IST)

வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி! – கண்ணீர் மழையில் மூழ்கிய ரசிகர்கள்!

KKR
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை அடைந்தது.



இந்த போட்டியில் வழக்கமான சிவப்பு ஜெர்சியை விடுத்து பச்சை ஜெர்சியுடன் இறங்கி ஆர்சிபி ஆரம்பம் முதலே க்ரீன் சிக்னல் கிடைத்தபடி நன்றாக ஆட தொடங்கியிருந்தார்கள். கொல்கத்தாவிடம் நிறைய ரன்களை விட்டபோதும் ஒருவாறாக 222க்குள் சுருக்கி 223ஐ டார்கெட்டாக கொண்டு களம் இறங்கியது ஆர்சிபி.

நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி 18 ரன்களில் அவுட் ஆனபோதே பலருக்கும் நம்பிக்கை தளர்ந்தது. அடுத்து வந்த ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் ஆளுக்கு ஒரு அரை சதம் வீழ்த்தி அணியின் ரன்களை உயர்த்தினர். அவர்கள் விக்கெட்டுக்கு பிறகு மொத்த அணியும் தினேஷ் கார்த்திக்கின் மீது நம்பிக்கையோடு காத்திருந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 18.6வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆனாலும் கரண் சர்மா நின்று விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை வீழ்த்த அணியின் டார்கெட் 2 பந்துகளுக்கு 3 ரன்கள் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் அந்த சமயம் எதிர்பாராதவிதமாக கரண் சர்மா விக்கெட் விழுந்தது. அடுத்து உள்ளே பெர்குசன் இறங்க கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் ஓடி விட்டால் மேட்ச்சை ட்ரா செய்யலாம் என திட்டமிட்டனர்.

ஆனால் பந்தை அடித்துவிட்டு இரண்டாவது ரன் ஓடி வருவதற்குள் பெர்குசன் ரன் அவுட் செய்யப்பட்டார். பெரிய போராட்டம் நடத்தி கடைசியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆர்சிபி. இதை கண்ட ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட காட்சிகளையும் காண முடிந்தது. இந்த தொடர் தோல்விகளால் இந்த ஐபிஎல் போட்டியிலிருந்து முதல் அணியாக ஆர்சிபி ப்ளே ஆப் தகுதியை இழந்து வெளியேற இருக்கிறது.

Edit by Prasanth.K