1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (14:01 IST)

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

india won1
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் எண்ணிக்கையில் 263 ரன்களும், இரண்டாவது இன்னிசையில் 113 ரன்களும், எடுத்தன. இதனை அடுத்து முதலில் நிகழ்ச்சியில் 262 ரன்கள் எடுத்த இந்தியா 115 என்ற இலக்கை நோக்கி விளையாடியது.
 
இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva