திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (13:09 IST)

விமர்சகர்களை கிழித்தெடுத்த ரவி சாஸ்திரி!

இந்தியா அணி தோல்வியடையும் போது விமர்சிப்பவர்கள் தற்போது எங்கே போனார்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அனி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு விமர்சகர்கள் அணியின் தேர்வு சரியில்லை என விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற புள்ளி கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
 
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

விமர்சகர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான். வெற்றிப்பெற்றால் எதிர் அணி சரியாக விலையாடவில்லை. இலங்கை அணியுடன் விளையாடி வெற்றி பெற்றபோது இலங்கை அணி பலவீனமாக இருந்ததது. தென்னாப்பிரிக்கா அணியுடன் வெற்றி பெற்றபோது, அவர்கள் சரியான பார்மில் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். அணியை அதன் போக்கில் விடுவதே நல்லது என்பதை மறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.