1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (15:15 IST)

தோனியை மட்டம்தட்டி ஆட்டம் ஆடும் கோலி, ரவி சாஸ்திரி??

இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை ஓரம்கட்டி ஆட்டம் ஆடுவதாக செய்திகள் வெளியாகின்றன.


 
 
அணியில் புதிதாக களமிறங்கும் வீரர்களை எந்த இடத்தில் களமிறக்கலாம் என ஒவ்வொரு முறை வெவ்வேறு இடங்களில் களமிறக்கி சோதிப்பர். 
 
ஆனால், தற்போது அனுபவமிக்க வீரரான தோனியை இப்படி மாற்றி மாற்றி களமிறக்கி சோதனை செய்து வருகின்றனர் என செய்திகள் கூறுகின்றன. 
 
தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கோலி தலையில் விளையாடி வருகிறார் தோனி. இந்நிலையில் இவரை கோலி மற்று ரவி சாஸ்திரி திட்டமிட்டே பேட்டிங்கின் போது இடங்களை மாற்றி இறக்கி வரும் விஷயம் தெரியவந்துள்ளது.
 
தோனியின் உடல் தகுதி குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். 
 
இருப்பினும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் ஒரு வீரரை இவ்வாறு செய்வது தேவையற்றது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.