தொடர்புடைய செய்திகள்
- ஆசியகோப்பை இறுதிப் போட்டியில் இடம்பெற்ற தமிழக வீரர்
- தமிழக வீரர் உலகக் கோப்பை அணியில் இல்லாதது எனக்கும் வருத்தம்தான்… நடராஜன் கருத்து!
- கவுதம் காம்பீர் பற்றிய வதந்தி: லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் விளக்கம்
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர் இல்லாத உலகக் கோப்பை அணி!
- உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு! – கேப்டன், துணை கேப்டன் யார்?
அஸ்வின் உலகக் கோப்பையில் தேர்வாக வாய்ப்பு.. ரோஹித் ஷர்மா சொன்ன தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்த முறை உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெறவில்லை. கடைசியாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் இல்லாமல் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்