வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (07:23 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.. ஆஸி. வீரர் கோரிக்கை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி தேதி குறித்த அறிவிப்பை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2021, 2023 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில் மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி அதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை நடந்த இரு தொடர்களிலும் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருமுறையும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது. இந்நிலையில் ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் “இறுதிப் போட்டியை மூன்று போட்டிகள் கொண்ட நடத்தவேண்டும். அப்போதுதான் ஒரு அணி முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் போராடி தங்களை நிலைநாட்ட வாய்ப்பிருக்கும்” எனக் கூறியுள்ளார்.