பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்.. 19 பேர் பலி என தகவல்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 19 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஆதரவு நாளிதழ் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருவதாகவும் அந்த இதழின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆப்கானிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்துவதற்கான காரணமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran