1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022-; Kolkata won by 218 runs

ஐபிஎல் 2022-; கொல்கத்தாவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்கு

கொல்கத்தா
ஐபிஎல் தொடரின் 30வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தனர்.

எனவே,ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 103 ரன்களும், படிக்கல் 24 , சாம்சன் 38 ரன்களும், ஹெட்மர் 26 ரன்களும், எடுத்து அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

கொல்கத்தா அணியில் நரென் 2 விக்கெட்டும், மாவி மற்றும் ரசல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இளைய மகன் உயிரிழப்பு…உலக ரசிகர்கள் அதிர்ச்சி