1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:29 IST)

ஐபிஎல் திருவிழாவில் இன்று RR vs MI… வெற்றிப்பாதைக்கு திரும்புமா மும்பை?

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும்7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இனிமேல் வரும் போட்டிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் 38 ஆவது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் 14 புள்ளிகளோடு எளிதாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைப் பெறும்.

மும்பை அணியைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோரைத் தவிர மற்றவர்கள் நிலையான ஃபார்மில் இல்லாதது வருத்தத்திற்குரியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலோ சஞ்சு சாம்சன், பட்லர் மற்றும் ரியான் பராக் என மாறி மாறி அசத்தி வருகின்றனர். இதனால் இன்று ராஜஸ்தான் அணியை எதிர்கொள்வது கடினமான ஒன்றாக இருக்கும்.