ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது ஏன்? மௌனம் உடைத்த ரெய்னா!

Last Updated: புதன், 6 ஜனவரி 2021 (11:55 IST)

இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா தான் ஏன் சென்னை அணியில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை அணி ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை தழுவியது. சி எஸ் கேவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக ரசிகர்களால் சொல்லப்படுவது அணியின் தூணாக இத்தனை ஆண்டுகாலம் இருந்த ரெய்னா இல்லாததுதான். ஐபிஎல் தொடருக்காக துபாய் சென்ற ரெய்னா அங்கு அணி நிர்வாகத்தினரோடு ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா திரும்பியதாக சொல்லப்பட்டது. மற்றொரு காரணமாக இந்தியாவில் ரெய்னாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினருடன் இருப்பதற்காக சென்றதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அதுகுறித்து ரெய்னா பேசியுள்ளார். அதில் ‘அந்த நேரத்தில் குடும்பமா கிரிக்கெட்டா என்ற இக்கட்டான நிலையில் குடும்பத்தை தேர்வு செய்தேன். கிரிக்கெட் எப்போது வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். இந்தியா வந்த பிறகு போட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அணியில் இல்லை என்றாலும் வீரர்களுடன் தொடர்பில் இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :