தொடர்புடைய செய்திகள்
- பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு
- ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடும் எனக் கூறியதை கேலி செய்தனர் - பாகிஸ்தான் வீரர்
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து: என்ன காரணம்?
- ரோஹித்துக்கு வழிவிடப் போவது யார்? இந்திய அணியில் அடுத்த குழப்பம்!
இந்த வருஷம் ஐபிஎல்லில் விளையாட மாட்டேன்! – இ சாலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டெய்ன்!
பிரபல தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டெல் ஸ்டெய்ன் இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளில் பல்வேறு அணி நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சார்பில் விளையாடி பெயர் பெற்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் ஐபிஎல்லில் இந்த ஆண்டு விளையாட போவதில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விளையாடி வருவதால் ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்