1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Quinton De kock announced retirement from odi cricket

30 வயதிலேயே ஓய்வை அறிவித்த இளம் நட்சத்திர வீரர்!

கில்கிறிஸ்ட்
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக். அந்த அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இப்போது அந்த அணியின் பேட்டிங் நம்பிக்கையாக உள்ளார் டிகாக்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

விரைவில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள் தொடரில் இருந்தும் ஒய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தமிழக வீரர்கள் இடம் பெறாத 50 ஓவர் உலகக்கோப்பை அணி! 20 ஆண்டுக்கு பின் இப்போதுதான்..!