ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 ஜனவரி 2022 (15:37 IST)

மீண்டும் சொதப்பிய புஜாரா & ரஹானே! மோசமான நிலையில் இந்தியா!

கேப்டவுனில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான நிலைமையில் உள்ளது.

கேப்டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடரும் என்பதும் இந்த போட்டியில் இந்திய தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா ஆட்டமிழந்தார். அவருக்கடுத்து வந்த ரஹானேவும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இப்போது கேப்டன் கோலியோடு ரிஷப் பண்ட் இணைந்து விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட்களை இழந்து 70 ரன்கள் சேர்த்துள்ளது.