திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:16 IST)

நிலை குலைந்த இந்தியா… 39 ரன்களுக்கு 3 விக்கெட்!

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.          
    

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் இன்று ஓவல் டெஸ்ட் சற்று முன்னர் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி சற்று முன்பு வரை 28 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. முன்னதாக சில ஓவர்களுக்கு முன்னர் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரன்கள் சேர்க்காமலேயே 5 ஓவர்கள் கடந்த நிலையில் இப்போது ராகுலும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சிறிது நேரம் தாக்குப் பிடித்த இந்திய அணியின் தூண் புஜாரா 31 பந்துகளுக்கு 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார். இப்போது இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து அதல பாதாளத்தில் கிடக்கிறது. ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார். அவராவது கோலியுடன் சேர்ந்து அணியை மீட்பாரா என்ற ஆவல் எழுந்துள்ளது.