1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pat Cummins missed the chance equal dhoni record

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தலைமையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டி வரை வந்து தோற்றது. கடந்த சில சீசன்களாக சொதப்பி வந்த ஐதராபாத் அணி இந்த் ஆண்டு பேட் கம்மின்ஸ் வருகையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் இறுதிப் போட்டியில் மிக மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்தது.

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

அதன் பின்னர் நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடரையும் அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இப்போது துவண்டு போய் கிடந்த ஐதராபாத் அணியை அவர் இறுதிப் போட்டிவரை அழைத்து வந்துள்ளார். இதன் மூலம் தற்போது கிரிக்கெட் அணிக் கேப்டன்களில் தலைசிறந்தவராக பேட் கம்மின்ஸ் உருவாகி வருகிறார் என்ற பாராட்டுகள் கிடைத்தன.

ஒருவேளை அவர் நேற்றைய போட்டியில் வென்று கோப்பையைப் பெற்றிருந்தால் 50 ஓவர் உலகக் கோப்பையும் வென்று ஐபிஎல் கோப்பையும் வென்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால் அவரே சன் ரைசர்ஸ் அணிக்குக் கேப்டனாக தொடர்வார் என்பதால் அவருக்கு இந்த சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?