செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By
Last Updated : சனி, 25 மே 2024 (10:28 IST)

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ் தலைமையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. கடந்த சில சீசன்களாக சொதப்பி வந்த ஐதராபாத் அணி இந்த் ஆண்டு பேட் கம்மின்ஸ் வருகையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

அதன் பின்னர் நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடரையும் அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இப்போது துவண்டு போய் கிடந்த ஐதராபாத் அணியை அவர் இறுதிப் போட்டிவரை அழைத்து வந்துள்ளார். இதன் மூலம் தற்போது கிரிக்கெட் அணிக் கேப்டன்களில் தலைசிறந்தவராக பேட் கம்மின்ஸ் உருவாகியுள்ளார் என்பது தெரிகிறது. ஒரு வேளை இந்த ஐபிஎல் தொடரையும், அதன் பின்னர் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரையும் அவர் வெல்லும் பட்சத்தில் அந்த கருத்து உறுதியாகிவிடும்.