வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (13:39 IST)

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி போட்டியில் ஆரஞ்சு ஆர்மி எப்படி விளையாட வேண்டும் கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று பேட் கம்மின்ஸ் சவால் விட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி கோப்பையை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் போட்டியை வெல்ல தீவிரமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் பேட்டி அளித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு தெரியும் என்று நம்புகிறேன். இந்த சீசனில் எங்களுக்கு சவால் கொடுத்துள்ளதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒன்றை உறுதியாக சொல்கிறேன், ஆரஞ்சு ஆர்மி தங்களது சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்துள்ளனர் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பேட் கம்மின்ஸ்  சவால்   விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் என்ன பதிலடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva