செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (06:42 IST)

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.. இதற்காக 20 அணிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணிக்கு அனைத்து லீக் போட்டிகளும் அமெரிக்காவில் நடக்கும் விதமாக அட்டவணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை கோப்பையை வெல்லப்படும் அணிகளில் ஒன்று எனக் கணிக்கப்படும் அணியாக பாகிஸ்தானும் உள்ளது. அந்த அணியில் இளம் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார் அஸாம் கான். இவர் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மொயின் கானின் மகன் ஆவார்.

அசாத்தியமான அதிரடி ஷாட்களை ஆடி பவுண்டரிகளை பறக்கவிடும் அஸாம் கானிடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவரது உடல் எடை. கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு மேல் இருக்கும் அவர் சர்வதேச போட்டிகளில் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த பிஎஸ்எல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார்.