தொடர்புடைய செய்திகள்
- 49 ஓவர்களில் ஆல் அவுட் ஆன பாகிஸ்தான்.. நெதர்லாந்துக்கு இலக்கு எவ்வளவு?
- AsianGames2023- ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி
- பிரபல நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டரான தோனி
- முதல் முறையாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இந்தியாவை வெல்லும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!
- Worldcup 2023: ரெண்டே பேரு.. இங்கிலாந்தை வெச்சு செஞ்ச நியூஸிலாந்து! – ஆரம்பமே அதகளம்!
பவுலர்களால் தப்பித்த பாகிஸ்தான்… நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி!
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
கேப்டன் பாபர் ஆசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த ரிஸ்வான் மற்றும் சவுத் சக்கீல் ஆகியோர் நிலைத்து நின்று அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர்வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் சேர்த்தது. ஒரு கத்துக்குட்டி அணியிடம் அனைத்து விக்கெட்களையும் பாகிஸ்தான் அணி இழந்திருப்பது விமர்சனங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது.
அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.