வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:36 IST)

தோனி செய்த மாற்றத்தை பாபர் ஆசாம் செய்யவில்லை.. தோல்விக்குக் காரணம் கூறும் முகமது ஆமீர்!

உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்த தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம்தான் காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பாபருக்கு ஆதரவாக பேசியுள்ள ரமீஸ் ராஜா “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஸ்டத்தை மாற்றாமல் கேப்டனை மட்டும் மாற்றி எந்த பயனையும் பெறமுடியவில்லை” எனக் கூறியிருந்தார்.

அவருக்கு பதில் கூறியுள்ள முகமது ஆமீர் “சிஸ்டத்தை மாற்றவேண்டும் என்பதால் சரியான பார்வை இல்லை. இதே சிஸடத்தின் கீழ்தான் இம்ரான் கான் உலகக் கோப்பையை வென்றார். அதே போல 2009 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றோம். மாற்ற வேண்டியது எல்லாம் கேப்டனின் அனுகுமுறைதான். இந்திய அணியில் தோனி செய்த மாற்றங்களை பாபர் ஆசாமால் பாகிஸ்தான் அணிக்குள் செய்ய முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.