வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (07:31 IST)

தோல்வியே இல்லாமல் இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்… விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து!

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்துள்ளன. இதில் தோல்வியே இல்லாமல் இந்திய அணி விளையாடிய அனைத்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அதிரடி போக்கு குறித்து பேசியுள்ள முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் வீவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணி தோல்வியே இல்லாமல் உலகக் கோப்பையை வெல்ல முடியும். நான் மட்டும் ஓய்வறையில் இந்திய அணியோடு இருந்தால் “யோசிக்காமல் இதுபோல அதிரடியாக விளையாடுங்கள் என்று கூறுவேன்.

எப்போதுமே வீரர்களுக்கு ஒரு பயம் வரும். தொடர்ந்து நாம் சிறப்பாக விளையாடி அனைத்து போட்டிகளையும் வெற்றி பெறுகிறோம். அதனால் மோசமான ஒரு போட்டி வரும் என்று. அதை ஒழித்துவிட்டு நேர்மறை எண்ணத்தோடு விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.